வேறு ஒரு திட்டத்திற்காக அமித்ஷா வந்ததன் காரணமாகவே ஓபிஎஸ்சை அவரால் சந்திக்க இயலவில்லை என்றும், தேசிய ஜனநாயக கூட்டணியில் இபிஎஸ்சும் இருக்கிறார் ஓபிஎஸ்சும் இருக்கிறார் என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
மதுரையில் பாஜக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மக்கள் விரோத ஆட்சியை அகற்ற அனைவரும் ஓரணியில் திரளவேண்டும் என கேட்டுக் கொண்டார்.3