3 
அரசியல்

ஜூன் மாதத்திற்குள் பூத் கமிட்டி பணிகளை முடிக்க வேண்டும்.. அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு இபிஎஸ் உத்தரவு

ஜூன் மாத இறுதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

Web Team

ஜூன் மாத இறுதிக்குள் பூத் கமிட்டி அமைக்கும் பணிகளை முடித்து கொடுக்க வேண்டும் என அதிமுக மாவட்ட செயலாளர்களுக்கு அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார்.

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் பேசிய அவர், பூத் கமிட்டி தான் மிகப்பெரிய கட்டமைப்பு என்றும், அதை சரியான முறையில் செய்ய வேண்டும் எனவும் அறிவுரை வழங்கினார்.