கூட்டணி உடைய வாய்ப்பிருப்பதால் அதிமுக குறித்து கருத்து தெரிவிக்க கூடாது என பாஜகவினருக்கு கட்டுப்பாடு இருப்பதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பாஜக - அதிமுக கூட்டணி அமைத்த பிறகு சலசலப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அதிமுக குறித்து எதிர் கருத்து கூறுவதை பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் கட்டுப்படுத்துகிறார் என பேசினார்.