காமராஜரை போற்றுகிற இயக்கமாகத்தான் திமுக இருப்பதாக கூறிய வி.சி.க. தலைவர் திருமாவளவன், திருச்சி சிவா பேசியதை பெரிதுபடுத்த வேண்டாம் என வேண்டுகோள் விடுத்தார்.
சென்னை மயிலாப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், காமராஜர் அனைவருக்கும் உரித்தான பெருந்தலைவர் எனவும், அவரை யாரும் இழிவுபடுத்தி விட முடியாது எனவும் தெரிவித்தார்.