நகைக்கடன் பெறுவதில் பழைய நடைமுறையே தொடர வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ஏழை குடும்பங்கள் நம்பிக்கையுடன் பயன்படுத்தும் வழியாக தங்க நகைக் கடன்கள் இருப்பதால், பழைய நடைமுறையே தொடர வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் மத்திய நிதி சேவைகள் துறை வழங்கிய முக்கிய பரிந்துரைகளை பரிசீலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.