3 
அரசியல்

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தீர்ப்பு: அன்புமணி வரவேற்பு.. பாதிக்கப்பட்ட பெண்களுக்கு ரூ.1 கோடி இழப்பீடு வழங்கிடுக

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை பாமக தலைவர் அன்புமணி வரவேற்றுள்ளார்.

Srini Vasan

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கில், குற்றவாளிகள் 9 பேருக்கும் சாகும்வரை சிறை தண்டனை வழங்கிய தீர்ப்பை பாமக தலைவர் அன்புமணி வரவேற்றுள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டம் மருவத்தூரில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அந்த வழக்கில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தலா 1 கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

தற்போது வெளியாகியுள்ள இந்த தீர்ப்பால், பல பெண்கள் துணிச்சல் பெற்று புகார் கொடுக்க முன்வரலாம் என்றும், அவ்வாறு முன்வரும் பெண்களுக்கும் நீதியைப் பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அன்புமணி கோரிக்கை விடுத்துள்ளார்.