தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் எஸ்.ஐ.ஆர். பணிகளை கண்டித்து வரும் 24ஆம் தேதி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக, கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், பீகாரில் செய்தது போல, தமிழகத்திலும் பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி செய்து வருவதாக குற்றம் சாட்டினார். பாஜகவுக்கு எதிரான வாக்காளர்களை பட்டியலில் இருந்து நீக்கும் நடவடிக்கையாக தான் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்படுவதாக சந்தேகம் எழுப்பினார்.