பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சித் தலைவர் அன்புமணி ராமதாஸ் இடையிலான பிரச்னைக்கு பாஜக காரணம் இல்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த அவர், ராமதாஸ்- அன்புமணி இருவரும் ஒன்று சேர்ந்து பாஜக கூட்டணியில் தொடர வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.
பாஜக- அதிமுக கூட்டணி உடைந்து விடும் என்பது திருமாவளவனின் எண்ணமாக இருந்தால், திமுக கூட்டணியில் இருந்து அவர் வெளியேற வேண்டும் என்பது தனது விருப்பம் என்று கூறினார்.
மேலும், திமுகவை வீழ்த்துவதற்கு அனைத்து கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும் எனவும் நயினார் நாகேந்திரன் கேட்டுக் கொண்டார்.