பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் இருந்து ராமதாசின் பேரன் முகுந்தன் பரசுராமன், தனது பொறுப்பில் இருந்து ராஜினாமா செய்துள்ளார்.
முகுந்தன் பரசுராமனை பாமக இளைஞர் சங்கத்தலைவர் பதவியில் ராமதாஸ் நியமித்த போது, அக்கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
இந்த நிலையில், பரசுராமனுக்கு பொறுப்பு வழங்கிய போது, அன்புமணி அநாகரிகமாக நடந்து கொண்டதாக பாமக நிறுவனர் ராமதாஸ் குற்றம்சாட்டினார்.
இந்த நிலையில், முகுந்தன் வெளியிட்டுள்ள பதவி விலகல் கடிதத்தில், ராமதாசே குலதெய்வம் என்றும், பாமகவின் எதிர்காலம் அன்புமணிதான் என குறிப்பிட்டுள்ளார்.