பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழகம் திகழ்வதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அமைச்சர் கீதா ஜீவன் எழுதியுள்ள கட்டுரையை பகிர்ந்து, முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட பதிவில் கூறி இருப்பதாவது:
பெண்களுக்கு கல்வி, தொழில் நிறுவனங்களில் பெண்களின் பங்களிப்பு ஆகியவற்றின் மூலம் தமிழ்நாடு எவ்வாறு பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக திகழ்கிறது என்பதை அமைச்சர் கீதா ஜீவன் விளக்கமாக கூறி உள்ளார்.
குற்றச் செயல்களுக்கு எதிரான, விரைவான, கடுமையான நடவடிக்கை மற்றும் குறைந்து வரும் குற்ற விகிதங்கள் ஆகியவை காரணமாக பெண்களுக்கு பாதுகாப்பான மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.
விடியல் திட்டம், புதுமைப்பெண் திட்டம் போன்ற நடவடிக்கைகள் மற்றும் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த கட்டுரை இந்த சுதந்திர தினத்தில் படிக்கப்பட வேண்டிய ஒன்றாகும்.
இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.