38 
அரசியல்

ஒரே தேர்தல் முறையை வரவேற்று எழுதியுள்ளார் கலைஞர்.. ஒற்றை கட்சி ஆட்சிக்கு வழிவகுக்கும் என்கிறார் முதல்வர்

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வரவேண்டும் என்று கலைஞர் கருணாநிதியே நெஞ்சுக்கு நீதியில் எழுதியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

ஒரே நாடு ஒரே தேர்தல் முறை வரவேண்டும் என்று கலைஞர் கருணாநிதியே நெஞ்சுக்கு நீதியில் எழுதியுள்ளதாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

சென்னை திருவான்மியூரில் பாஜக சார்பில் நடைபெற்ற ஒரே நாடு ஒரே தேர்தல் கருத்தரங்கில் சிறப்பு விருந்தினராக ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண் கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் பேசிய நயினார் நாகேந்திரன், முதலமைச்சர் மு.க ஸ்டாலின் ஒரே தேர்தல் முறை ஒற்றை ஆட்சிக்கு வழிவகுக்கும் என்று தெரிவிப்பதாகவும், ஆனால் கலைஞர் ஒரே தேர்தல் முறையை வரவேற்றதாகவும் தெரிவித்தார்.