நீதி விசாரணை - சீமான் அறிக்கை 
அரசியல்

விசாரணை சிறைவாசி திராவிட மணி இறந்த விவகாரம்.. காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலே காரணம்

விசாரணை சிறைவாசி திராவிட மணியின் மரணத்திற்கு திருச்சி காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Srini Vasan

விசாரணை சிறைவாசி திராவிட மணியின் மரணத்திற்கு திருச்சி காவல்துறையின் கொலைவெறித் தாக்குதலே காரணம் என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதுகுறித்த அவரது எக்ஸ் பதிவில், திராவிட மணியின் உடலை வாங்க மறுத்து அவரது குடும்பத்தினர் நீதி விசாரணைக்கோரி போராடி வரும் நிலையில், திமுக அரசு இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்காமல் காலங்கடத்துவது கண்டனத்திற்குரியது என குறிப்பிட்டுள்ளார்.

அரசு, இனியும் காலங்கடத்தாமல் தம்பி திராவிட மணியின் மரணத்திற்குக் காரணமான காவலர்கள் மீது உடனடியாக கொலை வழக்கு பதிந்து கைது செய்வதுடன், விரைவான, நியாயமான நீதிவிசாரணைக்கு உத்தரவிட வேண்டுமென்று தனது அறிக்கை வாயிலாக சீமான் வலியுறுத்தியுள்ளார்.