20 
அரசியல்

மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம்..

தமிழக மக்கள் ஏற்றம் பெறும் வரை தான் ஓயப்போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

Web Team

தமிழக மக்கள் ஏற்றம் பெறும் வரை தான் ஓயப்போவதில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரிலான சுற்றுப்பயணத்தில் இதுவரை 21 நாட்களில் 61 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 25 லட்சம் மக்களை சந்தித்து, அவர்களின் குறைகள், கோரிக்கைகள் மற்றும் எண்ணவோட்டங்களை கேட்டறிந்ததாக கூறியுள்ளார்.

திமுக மக்கள் விரோத ஆட்சியை அகற்றிவிட்டு, தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதே தான் தெரிவிக்கும் நன்றி என தெரிவித்துள்ள இபிஎஸ், அதிமுக ஆட்சியில் கொண்டுவந்த திட்டங்களை தொடர முடியாமல், ஆடத் தெரியாதவர்களுக்கு தெருக்கோணல் என்பது போல,ஆளத் தெரியாத failure மாடல் ஆட்சி முற்றிலும் கோணலாக உள்ளதாக விமர்சித்தார்.

7 ஆவது முறை மட்டுமல்ல 70 ஆண்டுகள் ஆனாலும் இனி திமுகவிற்கு தமிழகத்தில் இடம் இல்லை என கூறியுள்ளார்.