வக்பு திருத்த சட்டத்திற்கு எதிராக திருச்சியில் விசிக சார்பில் மே 31 ஆ தேதி நடைபெறுவதாக இருந்த பேரணி, ஜூன் 14 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக அக்கட்சியின் தலைவர் திருமாவளவன் தெரிவித்தார்.
”மதச்சார்பின்மை காப்போம்” என்ற பெயரில் பேரணி நடத்தப்படும் என்று கூறினார்.