21 
அரசியல்

தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு?:கனிமொழி கேள்வி

தமிழக ஆளுநருக்கு, தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

Web Team

தமிழக ஆளுநருக்கு, தமிழர்கள் மீது அப்படி என்ன வெறுப்பு? என திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள பதிவில் கூறி இருப்பதாவது:

தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் 2022ஆம் ஆண்டு அறிக்கையின்படி, இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களைப் பிடித்திருக்கும் மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, ராஜஸ்தான்.

இந்த மூன்றுமே பாஜக ஆளும் மாநிலங்கள் என்பதில் யாருக்கும் சந்தேகம் இல்லை. இருந்தாலும் பட்டியலில் பத்து இடங்களுக்குள் கூட வராத தமிழ்நாட்டின் மீது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகமாக நடக்கும் மாநிலம் என்று பழி போடும் ஆளுநருக்கு, அப்படி என்ன தமிழர்களின் மீது வெறுப்பு?

அவர் பொறுப்பு வகிப்பது ஆளுநராகவா? இல்லை பாஜக தலைவராகவா?

இவ்வாறு திமுக எம்பி கனிமொழி பதிவிட்டுள்ளார்.