திமுக கூட்டணியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் பாஜகவை எதிர்ப்போம் என்று திருமாவளவன் திட்டவட்டமாக கூறினார்.
திருமாவளவனை திருத்தி NDA கூட்டணியில் சேர்ப்பதற்கான பொறுப்புகளை ஏற்பதாக, கேபி.ராமலிங்கம் கூறியிருந்த நிலையில், சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த திருமாவளவன் நட்பின் அடிப்படையில் ராமலிங்கம் தன்னை சந்திக்கலாம் என்று கூறினார்.