டெல்லிக்கு சென்று பல ஆயிரம் கோடி ரூபாய் நிதியோடு வந்தது போல பில்டப் கொடுப்பது ஏன் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருக்கும் பதிவில், மூன்று ஆண்டுகளாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக வீடியோ நாடகம் நடத்தி விட்டு இப்போது மட்டும் சென்றது ஏன் எனவும் பதிவிட்டுள்ளார்.
தங்கள் ஊழல் ஆட்சியின் தண்டனையில் இருந்து யாரும் காப்பாற்ற முடியாது என்று தெரிவித்துள்ளார்.