Rohith sharma 
விளையாட்டு

2026 டி20 உலகக்கோப்பை தொடர்

சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பர தூதராக அவரை நியமித்துள்ளது.

Web Team

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர வீரர் ரோகித் சர்மாவை கவுரவிக்கும் விதமாக சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் 2026 டி20 உலகக்கோப்பை தொடரின் விளம்பர தூதராக அவரை நியமித்துள்ளது. 10-வது ஐ.சி.சி. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 7-ந்தேதி தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை நடைபெற உள்ளது.

இந்த தொடருக்கான போட்டி அட்டவணை மும்பையில் அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த டி20 உலகக்கோப்பையை வழிநடத்தி வெற்றி பெற வைத்த ரோகித் சர்மாவை டி20 உலகக்கோப்பை 2026 தொடரின் விளம்பர தூதராக ஐ.சி.சி.-ன் தலைவர் ஜெய்ஷா அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார்.