West indies 
விளையாட்டு

வங்கதேச அணிக்கு எதிரான 2வது டி20 தொடர் போட்டி

வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது.

Web Team

வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரின் 2வது போட்டியிலும் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி தொடரை கைப்பற்றி அசத்தியுள்ளது. சட்டோகிராமில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டை இழந்து 149 ரன்கள் எடுத்தது.

தொடர்ந்து 150 ரன் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய வங்கதேச அணி 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 135 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி 2க்கு 0 என்ற புள்ளி கணக்கில் தொடரை கைப்பற்றியது.