F4 இந்தியன் ரேசிங் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் இளம்வீரர்களுடன் சீறிப்பாய்ந்த கார்களைக் கண்டு பார்வையாளர்கள் அசந்தனர். ஐந்து சுற்று போட்டிகளை கொண்ட இந்த ரேசிங் திருவிழா சென்னை மற்றும் கோவையில் நடைபெற்றது. இதில், 14 க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த இளம் வீரர்கள் பங்கேற்று தங்களது திறமைகளை வெளிப்படுத்தி அசத்தினர்.