Sanju samson 
விளையாட்டு

தோனிக்கு கீழ் விளையாட வேண்டும் என்பது ஒரு கனவு

சிஎஸ்கே அணியின் டிரஸ்ஸிங் அறையை போல் வேறு எந்த அணியிலும் அனுபவம் கிடைக்காது எனவும் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.

Web Team

ஜாம்பவான் தோனியுடன் டிரஸ்ஸிங் அறையைப் பகிர்ந்து கொள்வது குறித்தும் CSK-வின் எதிர்காலத் திட்டங்களுக்கு பங்களிப்பது குறித்தும் சஞ்சு சாம்சன் உற்சாகத்தை வெளிப்படுத்தினார். சிஎஸ்கே அணிக்கு சாம்சன் அளித்த நேர்காணலில், தோனியுடனான தனது முதல் சந்திப்பை நினைவு கூர்ந்தார். சிஎஸ்கே அணியில் தோனிக்கு கீழ் விளையாட வேண்டும் என்பது ஒரு கனவு என்றும், சிஎஸ்கே அணியின் டிரஸ்ஸிங் அறையை போல் வேறு எந்த அணியிலும் அனுபவம் கிடைக்காது எனவும் சஞ்சு சாம்சன் தெரிவித்தார்.