ஜூனியர் தெற்காசிய கால்பந்து போட்டியில் இந்திய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றது.
தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டி அருணாச்சல பிரதேசத்தில் உள்ள யூபியாவில் நடந்து வருகிறது. நேற்று நடைபெற்ற அரையிறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய அணி, மாலத்தீவை எதிர்கொண்டது.
இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 3க்கு பூஜ்ஜியம் என்ற கோல் கணக்கில் மாலத்தீவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.