அர்ஜென்டினா கால்பந்து அணியின் கேரள சுற்றுப்பயணம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. சர்வதேச கால்பந்து கூட்டமைப்பின் ஒப்புதல் பெறுவதில் தாமதம் ஏற்பட்டதால், நவம்பரில் நடைபெற உள்ள போட்டி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. போட்டி எப்போது நடைபெறும் என்பது பற்றிய அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.