Virat achievement 
விளையாட்டு

ஒரு நாள் கிரிக்கெட் போட்டி - விராட் கோலி புதிய சாதனை

இரண்டாம் இடத்தில் இருந்த இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கராவின் சாதனையை கோலி முறியடித்தார்.

Web Team

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் விராட் கோலி 54 ரன்களை எட்டியபோது ஒரு நாள் போட்டியில் 14 ஆயிரத்து 234 ரன்கள் அடித்து இரண்டாம் இடத்தில் இருந்து இலங்கை முன்னாள் வீரர் சங்கக்கராவின் சாதனையை கோலி முறியடித்தார். 18 ஆயிரத்து 426 ரன்களுடன் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் தெண்டுல்கர் தொடர்ந்து முதல் இடத்தில் நீடிக்கிறார்.