இந்திய அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில், முதல் சதத்தை அடித்தது அற்புதமான அனுபவம் என, தென்னாப்பிரிக்கா அணியிலுள்ள தமிழ்நாட்டை பூர்வீகமாக கொண்ட முத்துசாமி தெரிவித்தார். தனது 8-வது டெஸ்டில் விளையாடும் முத்துசாமி, தனது முதல் சதத்தை பதிவு செய்தார். கடந்த மாதம் பாகிஸ்தானுக்கு எதிராக 89 ரன் எடுத்ததே அவரது அதிகபட்ச ஸ்கோராக இருந்தது.