Shreays iyer 
விளையாட்டு

மீண்டும் இந்திய அணிக்கு திரும்பும் ஸ்ரேயாஸ் ஐயர்?

விஜய் ஹசாரே கோப்பையின் பிற்பகுதிப் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.

Web Team

காயம் காரணமாக அவதிப்பட்டு வந்த ஒருநாள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் பங்கேற்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. டி-20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடருக்கும் முன் இந்திய அணி, நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் விளையாடுகிறது. நியூசிலாந்துக்கு எதிரான போட்டிக்கு பிறகு, விஜய் ஹசாரே கோப்பையின் பிற்பகுதிப் போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயர் விளையாட வாய்ப்புள்ளதாகவும் தகவல் கூறப்படுகிறது.