காயம் காரணமாக சிகிச்சை பெற்று வந்த இந்திய கிரிக்கெட் அணி வீரர் ஸ்ரேயாஸ் ஐயருக்கு, மேலும் இரண்டு மாதங்கள் ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர். இதனால் வரும் 30ஆம் தேதி தொடங்கும் தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ஸ்ரேயாஸ் பங்கேற்கமாட்டார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது.