10 
விளையாட்டு

ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடர்.. சாம்பியன் பட்டம் வென்றார் கஜகஸ்தான் வீராங்கனை

பிரான்சில் நடைபெற்ற ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.

Srini Vasan

பிரான்சில் நடைபெற்ற ஸ்ட்ராஸ்போக் ஓபன் டென்னிஸ் தொடரில் கஜகஸ்தான் வீராங்கனை சாம்பியன் பட்டம் வென்றார்.

ஸ்ட்ராஸ்போக் நகரில் நடைபெற்ற இந்த பெண்கள் ஒற்றையர் பிரிவின் இறுதிப்போட்டியில் கஜகஸ்தானின் எலினா ரிபாகினா, ரஷியாவின் சாம்சோனோவா உடன் மோதினார்.

ரிபாகினா முதல் செட்டை 6- க்கு ஒன்று என கைப்பற்றினார்.

இரண்டாவது செட்டை சாம்சோனோவா வென்ற நிலையில், வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை ரிபாகினா 6-க்கு ஒன்று என கைப்பற்றி சாம்பியன் பட்டம் வென்று அசத்தினார்.