வரலாற்றில் முதல்முறையாக வங்கதேச அணிக்கு எதிரான டி20 தொடரை கைப்பற்றி யு.ஏ.இ. அணி அசத்தியுள்ளது.
மூன்றாவது மற்றும் கடைசி டி20போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 162 ரன்கள் மட்டுமே அடித்தது.
பின்னர் களமிறங்கிய யு.ஏ.இ. அணி 166 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இதன் மூலம் டி20 தொடரை 2க்கு 1 என்ற கணக்கில் யு.ஏ.இ அணி கைப்பற்றியது.