Punjab kings 
விளையாட்டு

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி

இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் அணியின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உழைத்துள்ளோம் என்பதற்கு இந்த சாதனையே சான்று என்றார்.

Web Team

இந்த ஆண்டு கூகுளில் அதிகம் தேடப்பட்ட ஐபிஎல் அணி என்ற சாதனையை பஞ்சாப் கிங்ஸ் அணி படைத்துள்ளது. உலக அளவில் அனைத்து விளையாட்டு அணிகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால், அந்த வரிசையில் பஞ்சாப் கிங்ஸ் அணி 4-வது இடம் பிடித்துள்ளது. இந்த சாதனை தொடர்பாக பஞ்சாப் கிங்ஸ் அணியின் தலைமை வணிக அலுவலர் சௌரப் அரோரா, இது மிகவும் முக்கியமான சாதனை. ஏனெனில், இந்த ஆண்டு முழுவதும் நாங்கள் அணியின் வளர்ச்சிக்கு எந்த அளவுக்கு உழைத்துள்ளோம் என்பதற்கு இந்த சாதனையே சான்று என்றார்.