விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா தொடர்ந்து ஃபிட்டாக இருக்கும் பட்சத்தில் 2027 ஒருநாள் உலகக்கோப்பையில் விளையாடுவர் என்று இந்திய அணியின் பந்துவீச்சு பயிற்சியாளர் மோர்னே மோர்கல் தெரிவித்துள்ளார். உலகக்கோப்பைக்கு இன்னும் நீண்ட காலம் இருப்பதால், தங்களுடைய ஃபிட்னசை நிர்வாகிக்கும் வரை தங்களுடைய உடல் நன்றாக ஒத்துழைக்கிறது என்று கருதும் வரை உலகக்கோப்பை பயணத்தில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா இருப்பார்கள் என்றார்.