மகளிர் டென்னிஸ் சாம்பியன்ஷிப் தொடரில் நேற்று நடைபெற்ற காலிறுதி சுற்றில் எலினா ரிபாகினா வெற்றி பெற்று அரையிறுதி சுற்றுக்கு முன்னேறினார்.
சவுதி அரேபியாவின் ரியாத் நகரில் நடைபெற்ற போட்டியின், ஒற்றையர் பிரிவில் ரஷியாவின் எகட்ரினா அலெக்சாண்ட்ரோவா உடன் மோதிய கஜகஸ்தானின் எலினா ரிபாகினா 6க்கு 4, 6க்கு 4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார். மற்றொரு போட்டியில் போலந்தின் இகா ஸ்வியாடெக்கை எதிர்கொண்ட அமெரிக்காவின் அமெண்டா அனிசிமோவா 6க்கு 4, 6க்கு 2 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்றார்.