IND Kabadi win 
விளையாட்டு

மகளிர் உலகக்கோப்பை கபடி குரூப் சுற்று

தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 63 -22 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியை பந்தாடி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.

Web Team

மகளிர் உலகக்கோப்பை கபடி குரூப் சுற்றில் நடப்பு சாம்பியன் இந்திய அணி ஹாட்ரிக் வெற்றி பெற்று அசத்தியுள்ளது. டாக்காவில் நடந்து வரும் மகளிர் உலகக்கோப்பை கபடியில் நடப்பு சாம்பியன் இந்திய அணி தனது முதல் 2 ஆட்டங்களில் முறையே உகாண்டா மற்றும் வங்காளதேசத்துக்கு எதிராக வெற்றி கண்டிருந்தது. இதனையடுத்து இந்தியா தனது 3-வது ஆட்டத்தில் ஜெர்மனியுடன் நேற்று மோதியது. இதில் தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய அணி 63 -22 என்ற புள்ளி கணக்கில் ஜெர்மனியை பந்தாடி ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்தது.