மேலடுக்கு சுழற்சி உருவாகிறது 
தமிழ்நாடு

தெற்கு அந்தமான் கடலில் மேலடுக்கு சுழற்சி உருவாகிறது.. நாளை மறுநாள் காற்றழுத்த தாழ்வு மையமாக மாற வாய்ப்பு

தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Srini Vasan

தெற்கு அந்தமான் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  

அந்தமான் கடலில் உருவாகும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியானது, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து தென்கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.