46 
தமிழ்நாடு

சிவராமன், அவனது தந்தை மரணம் குறித்து இபிஎஸ் சந்தேகம்.. இது காவல்துறை நடத்தும் நாடகமோ?- இபிஎஸ் சந்தேகம்..

கிருஷ்ணகிரி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுவதாகவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார்.

Srini Vasan

கிருஷ்ணகிரி பாலியல் துன்புறுத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளியான சிவராமன் மற்றும் அவரது தந்தை மரணம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சந்தேகம் எழுப்பியுள்ளார். பாலியல் குற்றத்தில் தொடர்புடைய முக்கிய புள்ளிகளின் பெயர்களை வெளியில் கூறிவிடுவாரோ என்ற அச்சத்தில், சிவராமன் கொல்லப்பட்டிருக்கலாமோ என்று பொதுமக்களால் கேள்வி எழுப்பப்படுவதாகவும் இபிஎஸ் குறிப்பிட்டுள்ளார். வழக்கில் தொடர்புடைய உண்மை குற்றவாளிகளை காப்பாற்ற முயற்சிக்கப்படுகிறதோ, காவல்துறை நடத்தும் நாடகமோ என்ற சந்தேகம் எழுவதாகவும் தெரிவித்துள்ள அவர், கிருஷ்ணகிரி தவிர வேறு ஏதேனும் மாவட்டங்களில் போலி NCC முகாம்கள் நடத்தப்பட்டுள்ளனவா ? போன்ற பலகேள்விகளை முன்வைத்துள்ளார். மேலும் சிறப்பு புலனாய்வுக்குழு உரிய விசாரணை நடத்தி உண்மையை வெளிக்கொண்டு வர வேண்டும் எனவும் இபிஎஸ் வலியுறுத்தியுள்ளார்.