53 
தமிழ்நாடு

தமிழகத்தில் ஏர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகம்..

தமிழகத்தில் விபத்து உள்ளிட்ட அவசர மருத்துவ தேவைகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

Web Team

தமிழகத்தில் விபத்து உள்ளிட்ட அவசர மருத்துவ தேவைகளுக்கு ஏர் ஆம்புலன்ஸ் சேவை தொடங்கப்பட்டுள்ளது.

சென்னை பூந்தமல்லி அடுத்த தண்டலம் பகுதியில் செயல்படும் தனியார் மருத்துவமனையில் ஏர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்பட்டு அதன் தொடக்கவிழா நடைபெற்றது.

போக்குவரத்து நெரிசலால் ஏற்படும் உயிரிழப்புகளை தவிர்க்கவும், மனித உறுப்புகளை குறிப்பிட்ட நேரத்தில் கொண்டு செல்லும் வகையிலும் இந்த ஏர் ஆம்புலன்ஸ் சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.