Selva vinayagam covid 19 
தமிழ்நாடு

கொரோனா குறித்து அச்சம் அடைய தேவையில்லை புதுவகை தொற்று எதுவும் இல்லை- சுகாதாரத்துறை..!

அச்சம் அடைய தேவையில்லை என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

Srini Vasan

அச்சம் அடைய தேவையில்லை என பொது சுகாதாரத்துறை இயக்குநர் செல்வநாயகம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், புதுவகை தொற்று எதுவும் இல்லை என்றும், சுகாராத்துறை தொடர்ந்து கண்காணித்து வருவதாக அவர் கூறியுள்ளார்.

ஒரு நாளைக்கு 10 ல் இருந்து 15 தொற்றுகள் பதிவாகி வருகிறது என தெரிவித்த அவர், அந்த தொற்றுகள் அனைத்துமே வீரியமற்றவை என தெரிவித்துள்ளார்.

இதனால், யாரும் மருத்துவமனையில் உள்நோயாளிகளாக அனுமதிக்கப்படவில்லை என்றும், தமிழகத்தில் எந்த வித உயிரிழப்பும் இதுவரை நிகழவில்லை எனவும் செல்வநாயகம் கூறியுள்ளார்.