சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று ஆயிரத்து 760 ரூபாய் உயர்ந்துள்ளது. 22 கேரட் தங்கத்தின் விலை சவரனுக்கு ஆயிரத்து 760 ரூபாய் உயர்ந்து 71 ஆயிரத்து 440 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் தங்கத்தின் விலை 220 ரூபாய் அதிகரித்து 8 ஆயிரத்து 930 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலை கிலோவிற்கு 3 ஆயிரம் ரூபாய் அதிகரித்து ஒரு லட்சத்து 11 ஆயிரம் ரூபாய்க்கும், கிராமுக்கு 3 ரூபாய் அதிகரித்து 111 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.