துருக்கிக்கு விடுமுறைக்குச் சென்ற இளம்பெண் எதிர்பாராத விதமாக உயிரிழந்த நிலையில், உடல் பரிசோதனையில் அவரது இதயம் அகற்றப்பட்டிருப்பதாக பிரிட்டிஷ் மருத்துவர்கள் கூறியது பெண்ணின் குடும்பத்தினரை அதிர்ச்சியில் உறைய செய்தது.
இங்கிலாந்தின் போர்ட்ஸ்மவுத்தைச் சேர்ந்த 28 வயதான பெத் மார்ட்டின், கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி தனது குடும்பத்தினருடன் விடுமுறைக்காக துருக்கிக்கு விமானத்தில் சென்றபோது எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட உடல் நலக்குறைவால் இஸ்தான்புல்லில் உள்ள ஓர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
பல உறுப்பு செயலிழப்பு காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு அவர் உயிரிழந்ததாக மருத்துவமனை தெரிவித்தது.
இதையடுத்து உடல் இங்கிலாந்து கொண்டு செல்லப்பட்டு பிரேத பரிசோதனை செய்ததில் அவரது இதயம் அகற்றப்பட்டுள்ளதாக அந்நாட்டு மருத்துவர்கள் கூறினர். இதனை துருக்கி அரசாங்கம் மறுத்துள்ளது.