திறமையான இந்தியர்களால் அமெரிக்கா அதிகமான பலன் அடைந்துள்ளதாக டெஸ்லா நிறுவன தலைவரும், உலகப் பெரும் பணக்காரருமான எலான் மஸ்க் கூறினார். தொழில்நுட்பம், கண்டுபிடிப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு அளப்பரியது என்றார். அதேபோல் திறமையானவர்களை கண்டறிவது மிகவும் சிரமம் எனவும் மஸ்க் கூறினார்.