35 
உலகம்

செந்தில் பாலாஜியின் சகோதரர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு..

அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Web Team

அமெரிக்கா செல்ல அனுமதி கோரிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கு நடைபெற்று வரும் நிலையில் இதய சிகிச்சை மேற்கொள்ள அமெரிக்காவுக்கு செல்ல அனுமதி கோரிய அசோக்குமாரின் மனுவை முதன்மை அமர்வு நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த மேல்முறையீடு மனு உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

அப்போது,15 நாட்கள் அனுமதி அளித்தால் போதும் என அசோக்குமார் தரப்பு வழக்கறிஞர் அனுமதி கேட்க, நீங்களே நினைத்தாலும் நீண்ட நாட்கள் அமெரிக்காவில் இருக்க முடியாது, ட்ரம்ப் வெளியேற்றி விடுவார் என நகைச்சுவையாக நீதிபதிகள் பதிலளித்தனர்.