ராணுவம் - போலீசார் இடையே வாக்குவாதம் 
உலகம்

பாகிஸ்தானில் ராணுவம் - போலீசார் இடையே வாக்குவாதம்.. காவல் நிலையத்தில் நுழைய முயன்ற ராணுவத்தினர் தடுத்து நிறுத்தம்

பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

Srini Vasan

பாகிஸ்தானில் அந்நாட்டு ராணுவம் மற்றும் காவல்துறையினர் இடையே ஏற்பட்ட கடுமையான வாக்குவாதம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள Lakki Marwat காவல் நிலையத்தில் நுழைய முயன்ற ராணுவ வாகன அணிவகுப்பை நுழைவாயில் பகுதியில் தடுத்து நிறுத்திய போலீசார் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

காஷ்மீருக்கு செல்லாமல் இங்கு என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள் எனவும்? உங்கள் மேஜர் ஜெனரலே வந்தாலும் தங்களை ஒன்றும் செய்ய முடியாது எனவும் போலீசார் பேசிய காட்சிகள் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன.

ராணுவம் உள்ளூர் விவகாரங்களில் தலையிடுவதால்,போலீசார் மோதல் போக்கை கடைபிடித்து வருவதாக கூறப்படுகிறது.