Train issue 
உலகம்

இங்கிலாந்தில் ரயில் பயணிகள் மீது கொடூர தாக்குதல்

இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Web Team

இங்கிலாந்தில் ரயில் பயணிகள் மீது நடத்தப்பட்ட கத்திக் குத்து தாக்குதல் சம்பவம் தொடர்பாக இருவரை அந்நாட்டு போலீஸ் கைது செய்துள்ளது. சனிக்கிழமை மாலை லண்டன் நோக்கி சென்ற ரயிலில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் 9 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிகிறது.

இந்த விவகாரம் தொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் அந்நாட்டை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஆனால் தாக்குதலுக்கான காரணம் தெரிய வராத நிலையில், தொடர்ந்து விசாரணை முழு வீச்சில் நடந்து வருகிறது.