நேபாளத்தில் மீண்டும் வெடித்த GEN Z இளைஞர்களின் போராட்டம் அரசின் பேச்சுவார்த்தையை அடுத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு இயல்பு நிலை திரும்பியது. நேபாளத்தில் முன்னாள் தலைமை நீதிபதி சுஷிலா கார்க்கி தலைமையிலான இடைக்கால அரசு செயல்பட்டு வரும் நிலையில், பாரா மாவட்டத்தில் முன்னாள் பிரதமர் கேபி சர்மா ஒலி அரசு ஆதரவாளர்களுக்கும், ஜென் Z இளைஞர்களுக்கும் இடையே ஏற்பட்ட மோதலால், அங்கு மீண்டும் வன்முறை வெடித்தது.