இஸ்ரேல் ராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் காசாவின் ஜபாலியா நகரம் சிதைந்து கிடைக்கும் வீடியோ காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
நகரில் உள்ள கட்டடங்கள் உருக்குலைந்து கிடப்பதும், சேதமான கட்டடங்களுக்கு மத்தியில் உயிரிழந்த கிடக்கும் உறவினர்களையும், மிஞ்சி இருக்கும் பொருட்களையும் மக்கள் தேடுவதும் வீடியோவில் பதிவாகி உள்ளது.
மேலும், தாக்குதலில் உயிரிழந்தவர்களின் உடல்கள் ஒரே இடத்தில் மொத்தமாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும், கொத்துக் கொத்தாக இறந்து கிடக்கும் மக்களின் உடல்களை பார்த்து உறவினர்கள் கதறி அழும் காட்சிகளும் காண்போர் நெஞ்சையும் கலங்க வைப்பது போல் உள்ளது.