இந்திய மாணவர்களுக்கு அதிகளவில் விசாக்களை வழங்கி அமெரிக்கா சாதனை படைத்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் இந்திய மாணவர்களுக்கு விசா வழங்குவதில் தாராளம் காட்டி வரும் அமெரிக்கா, இந்த ஆண்டும் அதிக விசாக்களை வழங்கியுள்ளது.
அதன்படி, நடப்பு ஆண்டில் மட்டும் 1 லட்சத்து 40 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு விசா வழங்கப்பட்டுள்ளது.