ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் வலியுறுத்தல்
முஸ்லிம் நாடுகள் தங்களுக்கிடையேயான வேறுபாடுகளை ஒதுக்கிவிட்டு ஒன்றிணைந்து செயல்பட வேண்டும் என ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி வலியுறுத்தியுள்ளார். பெரிய வல்லரசுகள் முன்வைக்கும் அதிகப்படியான கோரிக்கைகளை எதிர்கொள்ள, இஸ்லாமிய நாடுகளிடையே ஒற்றுமையும் ஒத்துழைப்பும் அவசியம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மைதானத்தின் மீது தாழ்வாக பறந்த பயணிகள் விமானம்
தென்னாப்பிரிக்கா-நியூசிலாந்து ரக்பி போட்டிக்கு முன்பாக, கேப்டவுன் மைதானத்தின் மீது 2 பயணிகள் விமானங்கள் மிகத் தாழ்வாக பறந்தது பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் 60 ஆயிரம் ரசிகர்கள் முன்னிலையில் நடைபெற்ற இந்த காட்சியில், விமானங்கள் ஒன்றுக்கொன்று மிக அருகில் சென்றது போல் தெரிந்ததால் ரசிகர்கள் அதிர்ச்சியடைந்தனர்.