25 
உலகம்

நாராயண் கோவில் மீது மர்மநபர்கள் இனவெறி தாக்குதல்..

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நாராயண் கோவில் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் இனவெறியால் Go home brown என கருப்பு மையால் எழுதி அத்துமீறலில் ஈடுபட்டனர்.

Web Team

ஆஸ்திரேலியாவின் மெல்போர்னில் உள்ள நாராயண் கோவில் மீது தாக்குதல் நடத்திய மர்மநபர்கள் இனவெறியால் Go home brown என கருப்பு மையால் எழுதி அத்துமீறலில் ஈடுபட்டனர்.

ஆஸ்திரேலியாவில் ஒரு இந்திய மாணவர் கொடூரமாக தாக்கப்பட்டதாக வெளியானதை தொடர்ந்து இது நடந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள ஆஸ்திரேலிய இந்து கவுன்சில் தங்கள் அடையாளம் மற்றும் வழிபாட்டு உரிமையின் மீதான தாக்குதல் என குற்றம்சாட்டியது.

மேலும் இது வெறும் நாசவேலை மட்டுமல்ல, பயத்தை பரப்ப வேண்டுமென்றே செய்யப்பட்ட வெறுப்புச் செயலாகும் என்றது.