ஆயிரம் அணுகுண்டுகளின் சக்தி உடையது என விஞ்ஞானிகளால் கருதப்படும் அபாயகரமான சிறுகோள் பூமியை நெருங்கி வருவதாக நாசா தெரிவித்துள்ளது.
சுமார் 335 மீட்டர் சுற்றளவு கொண்ட 2003 MH4 என்ற இந்த சிறுகோளை உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் நாசா தெரிவித்துள்ளது.
சிறுகோள் பூமியை 60 லட்சம் கிலோமீட்டர் தொலைவில் கடந்து செல்ல உள்ளதாகவும், இது பூமியுடன் நேரடியாக மோத வாய்ப்பில்லை எனவும் நாசா தெரிவித்துள்ளது.
வினாடிக்கு 14 கிலோமீட்டர் வேகத்தில் இந்த சிறுகோள் பாய்ந்து செல்வதாகவும் நாசா கணித்துள்ளது.