சியால்கோட்டில் உள்ள ராணுவ முகாமிற்கு பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப் சென்ற நிலையில், பிரதமர் மோடியை அவர் காப்பியடிப்பதாக இணையத்தில் பலரும் கிண்டல் செய்து வருகின்றனர்.
ஆபரேசன் சிந்தூருக்கு பிறகு ஆதம்பூரில் உல்ள விமானப்படை தளத்திற்கு சென்ற பிரதமர் மோடி அங்கு விமானப்படை வீரர்கள் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிலையில் இதனை காப்பி அடிக்கும் விதமாக சியால் கோட்டிற்கு சென்ற பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீஃப், ஆபரேசன் பன்யான் அல்-மர்சூசில் பாகிஸ்தான் வெற்றி பெற்றிருப்பதாக தெரிவித்தற்காக விமர்சிக்கப்பட்டு வருகிறார்.